×

காஸ் விலை உயர்வு பொருளாதார ரீதியில் குடும்பத்தை சிதைக்கிறது: சுந்தரவள்ளி, சமூக செயற்பாட்டாளர்

இந்தியாவில் எந்த காலகட்டத்திலும் இல்லாத வகையில் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 300 மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அடிப்படை தேவை பொருட்களின் மீதான விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. சராசரியாக வருவாய் இல்லாத ஒருவரால் இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தை நடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. கொரோனா காலகட்டத்தில் ஒருவரின் மாத வருவாய் 3 ஆயிரம் கூட கிடையாது.
வீட்டு வாடகை, கல்வி செலவு, மருத்துவ செலவு போன்ற செலவுகளுக்கே இவர்களின் வருவாய் பத்தாத நிலையில் அடிப்படை தேவை பொருட்களின் விலையையும் தொடர்ந்து ஏற்றி வருகிறார்கள்.

ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்தனியாக விலை ஏறி வருகிறது. ஒரு குடும்பத்தின் வருவாயில் 40 சதவீதம் இதற்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 32 ரூபாய்க்கு கொடுக்க வேண்டிய பெட்ரோல், டீசலை 92 ரூபாய்க்கு கொண்டுவந்துவிட்டார்கள். புதிய வரியை போட்டு அதற்கு புதியதாக இவர்களே ஒரு பெயரையும் வைத்துவிடுகிறார்கள். இதேபோல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை ஏறிவிட்டது என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டால், அதற்கு நாங்கள் என்ன செய்வது என்று பதில் சொல்கிறார். அனைத்து விலையையும் ஏற்றுவோம் அதை கேள்வி கேட்கக்கூடாது என்று இவர்கள் சொல்கிறார்கள்.

இந்த விலை ஏற்றம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர்கள் ஆட்சிக்கு வரும் போது எதை கட்டுக்குள் வைப்போம் என்று கூறினார்களோ அதையே உயர்த்தி வருகிறார்கள். ஒரு வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம், விலைவாசியை கட்டுக்குள் வைப்போம், ஒவ்வொருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்போம் என்றார்கள். இதில் எதையுமே இவர்கள் செய்யவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கெடுத்துவிட்டார்கள். காஸ் விலை உயர்வு என்பது மிகவும் மோசமான இடங்களுக்கு குடும்பங்களை கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் மூலம் எல்லோருக்கும் காஸ் கொடுக்கப்போகிறோம் என்று கூறினார்கள்.

ஆனால், தற்போது காஸ் மானியத்தையே நிறுத்திவிட்டார்கள். 3 வருடத்திற்கு முன்பாகவே கேஸ் மானியத்தை ரத்து செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் எனவே அவர்களின் திட்டங்களை ஆதரிக்க வேண்டாம் என்று கூறினோம். நினைத்தது போலவே ஒட்டுமொத்த மானியத்தையும் பிடுங்கிவிட்டார்கள். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. தற்போது கேஸ் விலை உயர்ந்தால் மாற்று எரிபொருள் நகர்புறங்களுக்கு கிடையாது. சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இது இல்லத்தரசிகளுக்கு கூடுதல் அழுத்தத்தை உண்டாக்கும்.

பொருளாதார ரீதியாக கணவன்-மனைவிக்குள் பொருளாதாரத்தில் பிரச்னையை ஏற்படுத்தி ஒட்டுமொத்த இந்திய குடும்பங்களை சிதைப்பதாக தான் இதை பார்க்க முடியும். காஸ் தீர்ந்துபோச்சு என்று மனைவி சொன்னால்... இப்போது தானே வாங்கினோம் என்று ஆரம்பிக்கும் பேச்சு... பிறகு பிரச்னையில் முடிந்து.. உறவுகளுக்குள் பிரச்னையை ஏற்படுத்தும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அனைத்து தரப்பு பெண்களும் இதை உணர வேண்டும். காஸ் விலை உயர்வு என்பது மிகவும்  மோசமான இடங்களுக்கு குடும்பங்களை கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. உஜ்வாலா  திட்டத்தின் மூலம் எல்லோருக்கும் காஸ் கொடுக்கப்போகிறோம் என்று  கூறினார்கள். ஆனால், தற்போது காஸ் மானியத்தையே நிறுத்திவிட்டார்கள். 3 வருடத்திற்கு முன்பாகவே காஸ் மானியத்தை ரத்து செய்ய திட்டம் தீட்டுகிறார்கள்.

Tags : Cass ,Sundaravalli , Gas price hike is destroying the family economically: Sundaravalli, social activist
× RELATED மாநில அளவில் ஈட்டி எறிதல் முதலிடம்...