×

உடல் நலக்குறைவு, விபத்துகளில் உயிரிழந்த 62 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 62 காவலர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய தலைமை காவலர் பாஸ்கர், அரசு பெரிபெரல் மருத்துவமனை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவராஜ், ஆவடி டேங்க் பாக்டரி காவல் நிலைய தலைமை காவலர் பிரபாகரன், கோயம்போடு தலைமை காவலர் நரேந்திரகுமார், ராஜமங்கலம் உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், புழல் உதவி ஆய்வாளர் ராம்சிங், ராயப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் சபாநாதன், அமைந்தகரை உதவி ஆய்வாளர் வைகைமாறன், அமைந்தகரை போக்குவரத்து காவல் தலைமை காவலர் பழனி, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் செல்வகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், சென்னை பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு, பெரியமேடு போக்குவரத்து காவல் சிறப்பு  உதவி ஆய்வாளர் தேவன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13ம் அணி (பூந்தமல்லி) காவலர் விஜய், சென்னை பெருநகர காவல் சேலையூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த ரமேஷ், புதுப்பேட்டை ஆயுதப்படை, ‘இ’ நிறுமம், 17ம் அணியில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்த திருலோகசந்தர், ஆயுதப்படையில் காவலர்களாக பணிபுரிந்து வந்த ரவீந்திரன் மற்றும் கார்த்திக், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்த பிச்சாண்டி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 62 காவலர்கள் உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரேமா என்பவரின் கணவர் ராஜி, புல் தரையை பராமரிக்கும் பணியின் போது, எதிர்பாராத  விதமாக மின்சாரம் பாய்ந்தும், எர்ணாவூரை சேர்ந்த நாகலிங்கம் மகன் விக்னேஷ் கட்டுமான  பணியின் போது மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Financial assistance of Rs 3 lakh each to the families of 62 policemen who died due to ill health and accidents: Chief Minister's announcement
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...