ஜெயலலிதா 73-வது பிறந்தநாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73-வது பிறந்த நாள் விழாவில் அவரது திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். இது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளான வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுச்சிலைக்கு ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளனர். அதனை தொடர்ந்து 73வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிடுகின்றனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும். ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>