×

மெட்ரோ ரயிலில் இன்று முதல் கட்டணம் குறைப்பு

சென்னை: மெட்ரோ ரயிலில் இன்று முதல் கட்டணம் குறைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்கக் கோரி பயணிகள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று தமிழக அரசு நேற்று முன்தினம் மெட்ரோ ரயில் கட்டணத்தை ரூ.50ஆக குறைத்தது. இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 2-5 கி.மீ. வரை ரூ.20, 5-12 கி.மீ. வரை ரூ.30, 12-21 கி.மீ. வரை ரூ.40, 21-32 கி.மீ. வரை ரூ.50 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  
ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயண கட்டணம் ரூ.2,500 தான் வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : First fare reduction on Metro train today
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...