மத்திய அரசுக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம்: கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டுகோள்

திருவனந்தபுரம்: கேரளாவுக்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு மேலும் கொரோனா தடுப்பூசிகள் கோரி சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை இழந்த சுகாதார ஊழியர்களுக்கு பதிவுசெய்ய மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் 3வது முன்னுரிமை பெறும் முதியவர்களுக்கு போட கேரளாவுக்கு அதிகளவில் தடுப்பூசிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் சிலர் காலக்கெடுவுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான மூத்த குடிமக்கள் உள்ளனர். 3வது முன்னுரிமையில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதிவு மற்றும் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விரைவில் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கேரளாவில் இதுவரை 3 லட்சத்து 36 ஆயிரத்து 327 சுகாதார ஊழியர்கள் மற்றும் 57 ஆயிரத்து 678 ெகாரோனா முன்கள பணியாளர்கள் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர். அதுபோல 23 ஆயிரத்து 707 சுகாதார ஊழியர்கள் தடுப்பூசியின் 2வது டோஸை எடுத்து கொண்டனர்.

Related Stories:

>