காஞ்சி மாவட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் நியமனம்

சென்னை: புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை. புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவராக காரை செல்வம், மாவட்ட துணை செயலாளர்களாக கராத்தே ஜே.ராயப்பன், கட்டியாம்பந்தல் பி.சந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளராக படூர் பி.பி.வெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய செயலாளராக கட்டவாக்கம் ஆர்.கே.ரமேஷ், காஞ்சிபுரம் பெருநகர செயலாளராக ஜே.சேகர், நகர தலைவராக கோ.கருணாநிதி, உத்திரமேரூர் ஒன்றிய செயலாளராக வழக்கறிஞர் ஞானசேகரன், ஒன்றிய தலைவராக ஏ.அருள், ஒன்றிய பொருளாளராக ஆர்.தமிழ்ச்செல்வன், உத்திரமேரூர் பேரூர் தலைவராக கணபதி ஆகியோர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்பிசி.தனசேகரன், மாவட்ட தலைவர் பரணிமாரி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: