×

சந்து, பொந்துகளில் நுழைந்து செல்ல குட்டி காருக்கு மாறும் உபி. அவசர போலீஸ்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, அவசர போலீஸ் பிரிவு, பெரிய வாகனத்தில் இருந்து விரைவில் சிறிய காருக்கு மாறுகிறது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு, 112 அவசர போலீஸ் எண் பயன்பாட்டில் உள்ளது. அவசர உதவி கோரி இந்த எண்ணுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சமாக 15,000 முதல் 16,000 அழைப்புகள் வருகின்றன. உதவி தேவைப்படுவோரின் அவசரத்துக்காக, சம்பவ இடத்துக்கு செல்லும் போது, அவசர போலீஸ் பயன்படுத்தும் வாகனங்கள் பெரிய அளவிலானதாக இருப்பதால், உரிய நேரத்தில் சென்று உதவி அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, இப்பிரிவில் பயன்படுத்தப்படும் பெரிய ரக வாகனங்களுக்கு பதிலாக, மார்க்கெட் உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு எளிதாக செல்லும் வகையில், சிறிய ரக கார் விரைவில் சேர்க்கப்பட உள்ளது. இது குறித்து அவசர போலீஸ் பிரிவின் கூடுதல் டிஜிபி அசிம் ஆருண் கூறுகையில், ``உத்தர பிரதேச போலீசார், அவசர உதவி தேவைப்படுவோர் நகர்புறங்களில் இருந்தால் 8 நிமிடங்களிலும், புறநகரில் இருந்தால் 20 நிமிடங்களிலும் சென்று உதவுகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உதவி தேவைப்படுவோரை துரிதமாக சென்றடையும் வகையில், அவசர உதவி எண் 112 பிரிவில் விரைவில் சிறிய ரக கார் அறிமுகமாக உள்ளது,’’ என்றார்.

Tags : Ubi , Ubi turns into a small car to enter the alley, potholes. Emergency police
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்