×

இங்கிலாந்துடன் டி20 இந்திய அணி அறிவிப்பு

புதுடெல்லி: இங்கிலாந்து அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடர் முடிந்ததும், இரு அணிகளும் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. 5 டி20 போட்டிகளும் அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. முதல் டி20 மார்ச் 12ம் தேதியும், அடுத்த ஆட்டங்கள் மார்ச் 14, 16, 18, 20 தேதிகளிலும் நடக்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரோகித், கே.எல்.ராகுல், தவான், ஷ்ரேயாஸ், சூரியகுமார், ஹர்திக், பன்ட் (கீப்பர்), இஷான் கிஷண் (கீப்பர்), சாஹல், வருண் சக்ரவர்த்தி, அக்சர், வாஷிங்டன், திவாதியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.


Tags : T20 Indian ,England , Announcement of T20 Indian team with England
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...