அதிமுக-அமமுக கூட்டணி? பா.ஜ. தேசிய பொது செயலாளர் பேட்டி

பட்டுக்கோட்டை: ‘‘அதிமுக, அமமுக கூட்டணி அமைக்க அதிமுக தலைமைதான் முடிவு செய்யும்’’ என்று பா.ஜ. தேசிய பொதுச்செயலாளர் ரவி கூறினார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் பா.ஜ.கட்சியின் சட்டமன்றத் தொகுதி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ரவி அளித்த பேட்டி: சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தது இரண்டு இலக்கங்களில் அதிமுக கூட்டணியில் பா.ஜ. சீட் கேட்கிறோம். தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் பா.ஜ. கூட்டணி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் மூத்த தலைவர்கள். சசிகலாவின் பலமும், பலவீனமும் அவர்களுக்கு தெரியும். எனவே, அமமுக கூட்டணி குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: