×

கமலி பிரம் நடுக்காவேரி படத்தை இணைய தளத்தில் வெளியிட தடை: சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கமலி பிரம் நடுக்காவேரி படத்தை வெளிநாடுகள் மற்றும் இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ஆனந்தி நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி என்ற திரைப்படத்தை ராஜசேகர் துரைசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற 17 லட்சம் ரூபாய்க்கு, வினியோக நிறுவனமான மாஸ்டர் பீஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, 9 லட்சம் ரூபாயை வழங்கிய நிலையில், படத்தை வெளிநாடுகளில் வெளியிட மாஸ்டர் பீஸ் நிறுவனம் முயற்சிப்பதாக கூறி, 2 கே ஸ்டூடியோஸ் நிறுவனம், சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு சென்னை சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளிநாடுகளிலும் இணையதளங்களிலும் மார்ச் ஒன்றாம் தேதி வரை படத்தை வெளியிட மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிமன்றம், படத்தை வெளிநாடு மற்றும் இணையத்தில் வெளியிட தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி, வினியோக நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Tags : City Civil Court ,Kamali Pram Nadukkaveri , City Civil Court orders ban on Kamali Pram Nadukkaveri film
× RELATED தனியார் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற...