×

அங்கீகாரம் பெறும் மனைகளுக்கு அடிப்படை வசதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவுஅங்கீகாரம் பெறும் மனைகளுக்கு அடிப்படை வசதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அங்கீகராரம் இல்லாத 14 லட்சம் மனைகள் வரன்முறை செய்யப்படாமல் இருந்தது. இந்த மனைகளை வரன்முறை செய்ய கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் பிரத்யேகமாக இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வரன்முறை செய்வதற்காக விண்ப்பபிக்கலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது. அதன் பேரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரன்முறை செய்ய விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் மனைகள் வரன்முறை செய்யப்பட்டது. இந்த மனைகளை வரன்முறை செய்யும் போது அதற்காக வளர்ச்சிக் கட்டணம் தமிழக அரசு சார்பில் வசூலிக்கப்பட்டது.

எனவே இந்த கட்டணத்தை கொண்டு மனைகளின் வரன்முறை சட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று தமிழக அரசின் வீட்டு வசதித் துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் மனைகள் மற்றும் மனை பிரிவுகளுக்கு சாலைகள் குடிநீர் மற்றும் கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே செய்து கொடுக்கும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : Government of Tamil Nadu ,Basic Facility Local Organizations for Accredited Hatches , Basic Facilities for Recognized Lands Government of Tamil Nadu Order to Local Bodies
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...