செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் அனுப்பிய அரிய புகைப்படங்கள் : ஆச்சரியத்தில் நாசா விஞ்ஞானிகள்

கேப் கெனாவரல்: நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதும், அங்குள்ள சில பகுதிகளை அதன் கேமராவில் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை பார்த்து நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கினர். செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய நாசா அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் நேற்று முன்தினம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. சிறிது நேரத்தில் குறைந்த ரெசல்யூஷன் கொண்ட கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் படங்களை அது அனுப்பியது. இவற்றை நாசா நேற்று முன்தினம் டிவிட்டரில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது கேமராவில் மீண்டும் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதில், ஆறரை அடி, அதாவது 2 மீட்டர் நீள நிலப்பரப்பளவு, 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட 2 கிலோ மீட்டர் தூரமுள்ள டெல்டா ஆறு, துளைகள் நிறைந்த பாறைகள் ஆகியவற்றின் புகைப்படங்களை கண்டு நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இந்த பாறைகள் எரிமலை பாறைகளா? அல்லது வண்டல் மண் பாறைகளா? என்பதை அறிய விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர்.

இன்னும் சில வாரங்களில், பெர்சவரன்ஸ் மேலும் ஏராளமான புகைப்படங்களை எடுத்து அனுப்பும்.

* செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதும் இவற்றில் பெரும்பாலான கேமராக்கள் செயல்பட தொடங்கின.

* 25 கேமராக்கள், 2 மைக்ரோ போன்களுடன் பெர்சவரன்ஸ் ரோவர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

* இந்த கேமராக்கள் செவ்வாய் கிரகத்தின் சில பகுதிகளை புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன.

Related Stories:

More
>