சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் எஸ்.ஐ பணி நேர்முக தேர்வு புதிய அட்டவணை வெளியீடு: ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு

சென்னை: சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு புதிய அட்டவணையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான உத்தேச தேர்வு பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அந்த தேர்வு பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ் வழியில் படித்தோருக்கான இடஒதுக்கீடு செயல்படுத்துவது தொடர்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழ்வழி கல்வியில் பயின்றோருக்கான இடஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும், தற்போது டிசம்பர் 1ம் தேதி வெளியிட்டுள்ள உத்தேச தேர்வு பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இதை தொடர்ந்து, தமிழ்நாடு சீருடை தேர்வு குழுமம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தில் சார்பு ஆய்வாளர் 2019ம் ஆண்டு பணிக்கான நேர்முகத் தேர்வு மீண்டும் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு பிப்ரவரி 23ம் தேதியும், டிசம்பர் 28ம் தேதி நடைபெற இருந்த தேர்வு வரும் 24ம் தேதியும், டிசம்பர் 29ம் தேதி நடைபெற இருந்த தேர்வு வரும் 25ம் தேதியும், டிசம்பர் 30ம் தேதி நடைபெற இருந்த தேர்வு வரும் 26ம் தேதியும், 2021 ஜனவரி 4ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு வரும் 27ம் தேதியும், ஜனவரி 5ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு மார்ச் 1ம் தேதியும், ஜனவரி 6ம் தேதி நடைபெற இருந்த தேர்வு மார்ச் 2ம் தேதியும் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>