×

பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பழநியில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா-ஒரே நாளில் 280 பேர் பாதிப்பு

பழநி : தமிழகத்தில் கொரோனா 2வது அலை விஸ்வரூபமெடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. எனினும், அத்தியவாசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மளிகை, காய்கறி, உணவகங்கள், மருந்துக்கடைகள், பால்,  பேக்கரி கடைகள் செயல்பட அனுமதிப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்தை உணராத பொதுமக்கள் சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.பழநி, தொப்பம்பட்டி பகுதியில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 280க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். பழநியில் அரசு மருத்துவமனை, பழநியாண்டவர் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வழிகின்றன. தவிர, தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா படுக்கைகள் நிரம்பி விட்டன. எனினும், தற்போது வரை பொதுமக்கள் வெளியில் சுற்றுவது குறையவில்லை. டீக்கடைகளிலும் கும்பலாக நின்று டீ குடிப்பது அதிகரித்துள்ளது. உழவர் சந்தை, காந்தி மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போலவே உள்ளது. இவர்களில் பலர் முகக்கவசம் அணிவதே இல்லை. இதனால் தொற்று மேலும் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, தமிழக அரசு டீக்கடைகள் செயல்பட தடை விதித்து, அவசியமின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது அபராதம் விதிப்பது, காவல்துறை மூலம் தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பழநியில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா-ஒரே நாளில் 280 பேர் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Padani ,Viswarupam ,Palani ,2nd wave of Corona ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,Corona ,Palani Corona—280 ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை