புதுச்சேரி பேரவையில் நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை!: சபாநாயகர் சிவக்கொழுந்து

புதுச்சேரி: புதுச்சேரி பேரவையில் நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து சன்நியூஸுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர் உத்தரவுப்படி வரும் திங்கட்கிழமை புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். ஆளுநர் அலுவலக உத்தரவில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் சிறப்பாக செய்ய பேரவை செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியமன எம்.எல்.ஏக்கள் பாஜகவினர் என்று ஆளுநர் குறிப்பிட்டு இருப்பது தொடர்பாகவும் ஆலோசனை கெட்டப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Related Stories:

>