×

என் தாயை நேசிக்கிறேன்: தாயின் தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்க ஜனாதிபதி மாமா: ஷப்னத்தின் 12 வயது மகன் உருக்கம்.!!!

மதுரா: தனது தாயின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி 12 வயது சிறுவன் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்தவர் ஷப்னம் அலி. 2 எம்ஏ பட்டங்களை பெற்றவர். 6ம் வகுப்பை தாண்டாத சலீம் என்பவரை இவர் காதலித்தார். அவரையே திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்பினார். இதற்கு ஷப்னத்தின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. காதல் பித்து தலைக்கேறிய ஷப்னம், குடும்பத்தினர் எல்லோரையும் கொல்ல திட்டமிட்டார். கடந்த 2008ம் ஆண்டில் தனது தாய், தந்தை, 2 சகோதரர்கள், சகோதரரின் மனைவி, உறவுக்கார வாலிபர் மற்றும் 10 மாத கைக்குழந்தை ஆகிய 7 பேருக்கும் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். எல்லோரும் மயங்கியதும், அவர்களின் கழுத்தை ஈவுஇரக்கமின்றி அறுத்துக் கொன்றார்.

குலை நடுங்க வைத்த இந்த கொலை வழக்கில் ஷப்னம் அலிக்கும், காதலன் சலீமுக்கும் அம்ரோகா நீதிமன்றம் 2010ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. ஆனால், தண்டனையில் இருந்து தப்பிக்க, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அனைத்திலும் வழக்கு தொடர்ந்து தோற்றார். ஜனாதிபதியிடம் விண்ணப்பிக்கப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஷப்னம் அலியை தூக்கிலிட மதுரா சிறை நிர்வாகம் தயாராகி வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரையில் ஏராளமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் பெண்கள் யாரும் தூக்கில் போடப்பட்டது கிடையாது. ஷப்னத்தை தூக்கில் போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், சுதந்திர இந்தியாவில் பெண்ணுக்கு நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவாகத்தான் இருக்கும்.

இதற்கிடையே., தாய் ஷப்னமின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சிறய பலகையில் எழுதி குடியரசுத்தலைவருக்கு ஷப்னமின் மகனான 12 வயது சிறுவன் முகமது தாஜ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முகமது தாஜ், நான் என் தாயை நேசிக்கிறேன், ஜனாதிபதி மாமாவிடம் எனக்கு ஒரே ஒரு கோரிக்கை உள்ளது, அவர் என் தாயை தூக்கிலிட விடமாட்டார் என்றார். ஒரு நாற்காலியில் நின்று, தனது தாய்க்கு மன்னிப்பு கோரி எழுதப்பட்ட கோரிக்கையுடன் ஒரு ஸ்லேட்டைப் பிடித்தார். தாயை மன்னிப்பது ஜனாதிபதியின் பொறுப்பாகும், ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறினார்.

தாஜ் வளர்ப்பு பெற்றோர் உஸ்மான் சைஃபி கூறுகையில், தாஜ் தனது தாயை அடிக்கடி சந்திக்கிறார். நான் செல்லும் போதெல்லாம், அவள் என்னைக் கட்டிப்பிடித்து, நீ எப்படி இருக்கிறாய்? நீ என்ன செய்கிறாய்? உன் பள்ளி எப்போது திறக்கிறது? உங்கள் படிப்பு எப்படி முன்னேறுகிறது? - இவை அவள் கேட்கும் கேள்விகள் என்றார். மேலும், தாஜ்க்கு சிறந்த கல்வியை வழங்கவும், அவரை ஒரு நல்ல மனிதராக மாற்றவும் நாங்கள் முயற்சி செய்கிறோம். செய்தி என்னவென்றால், அவரது தாயார் எந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டாலும், குழந்தை ஒரு குற்றவாளி அல்ல என்றார்.


Tags : President ,Shapnam , I love my mother: Cancel mother's death sentence President's uncle: Shabnam's 12 year old son melts. !!!
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...