×

வேட்டங்குடி சரணாலயத்தில் 14,000 வெளிநாட்டு பறவைகள் முகாம்-இனப்பெருக்கத்திற்காக பாகிஸ்தானில் இருந்தும் வருகை

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் சுமார் 14,000 பறவைகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி, கொள்ளுக்குடிப்பட்டியில் 17 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் உள்ளது.

தற்போது இங்கு பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக  வந்து தங்கியுள்ளன. குறிப்பாக,  நத்தை கொக்கி நாரை, வாத்து, புள்ளி அழகு வாத்து, கொக்கு, முக்குளிப்பான்,  நாமகோழி, நைட் ஹெரான், பாம்புதாரா, கூழைக்கடா, மார்களியன், வெள்ளை அரிவாள் மூக்கன், உண்ணிகொக்கு உள்ளிட்ட பறவை இனங்கள் அதிகளவில் தங்கியுள்ளன.

பறவைகள் கணக்கெடுப்பு, சரணாலயத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில் திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கலை கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர்கள் கோபிநாத், கார்த்திகேயன் தலைமையில், 2ம் ஆண்டு விலங்கியல் துறையை சேர்ந்த 35 மாணவ, மாணவிகள் மற்றும் வனச்சரக அலுவலர் மதிவாணன், சரக பணியாளர்கள் ஈடுபட்டனர். ஒரு குழுவிற்கு 8 மாணவர்கள் வீதம் 4 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 57 வகையான 13 ஆயிரத்து 957 பறவைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags : Pakistan ,Hungudi Sanctuary , Tiruputhur: The bird census at Vettangudipatti Sanctuary near Tiruputhur has been going on for the last 2 days. Of which about 14,000
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்