×

சேலம் மணிவாசகம் உடல் தகனத்தின்போது கோஷம்: மாவோயிஸ்ட் ஆதரவாளர் மதுரையில் கைது

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள கணவாய்புதூர் கிராமம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்டான இவரை கடந்த 2019ம் ஆண்டு, கேரள வனப்பகுதியில் போலீசார் சுட்டுக் கொன்றனர். அவரது உடலை பெற்ற உறவினர்கள், ராமமூர்த்தி நகருக்கு கொண்டு வந்து சுடுகாட்டில் தகனம் செய்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த அவரின் ஆதரவாளர்களும், அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தினரும் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, கோஷமிட்ட மாவோயிஸ்ட்கள், மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரிகள் சந்திரா, லட்சுமி, மைத்துனர் சாலிவாகனன் மற்றும் மதுரையை சேர்ந்த விவேக், காடையாம்பட்டி சுதாகர் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படையினர் தேடி வந்தனர். ஓமலூர் டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 10 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, சேலத்தை சேர்ந்த செல்வராஜ்(55), பாலன்(41), சீனிவாசன்(66), தர்மபுரி அரூர் சித்தானந்தம்(57) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், மதுரை இந்திராநகர் முதல்வீதியை சேர்ந்த மாவோயிஸ்ட் ஆதரவாளரான சுரேஷ் (45) என்பவரை நேற்று முன்தினம் மதுரையில் கைது செய்தனர்.



Tags : Salem ,Maoist ,Maduro , Slogan during Salem Manivasakam cremation: Maoist supporter arrested in Madurai
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...