×

2 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி கோவையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

கோவை: ஒவ்வொரு வாரம் புதன்கிழமை நாட்களில் ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடக்கிறது. கடந்த புதன்கிழமை கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு குழந்தைகள் இறந்தது. அன்றைய தினம் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, ஹெப்படைட்டீஸ் பி மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சல், நிமோனியாவுக்கான மருந்தான பெண்டாேவலன்ட் தடுப்பூசி, ரோட்டாவைரஸ் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து மூன்று போடப்பட்டுள்ளது. இதையடுத்து, குறிப்பிட்ட பிரிவை கொண்ட ெபண்டாேவலன்ட், ரோட்டாவைரஸ் பேட்ஜ் தடுப்பூசி ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோவை மாவட்ட சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், “நம்மிடம் 4 பேட்ஜ் தடுப்பூசிகள் இருக்கிறது. இதில், பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் பெண்டாேவலன்ட், ரோட்டாவைரஸ் பேட்ஜ் தடுப்பூசிகள் போடுவதை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.


Tags : Vaccination strike in Coimbatore echoes the death toll of 2 children
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...