×

மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்: சிஏஏ, கூடங்குளம் வழக்கை வாபஸ் பெற வேண்டும்

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, அவர்களை பல வகைகளிலும் வதைத்ததுடன், வழக்கும் போட்டு துன்புறுத்தியதை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த வழக்குகளால் இளைஞர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பயணம் உள்ளிட்ட பல வாழ்வாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதை கடந்த ஜனவரி மாதமே விரிவாக எடுத்துரைத்த போதும், அலட்சியம் காட்டிய அதிமுக அரசின் முதல்வர் பழனிசாமி, இப்போது தேர்தல் நெருங்கி வருகிறது என்றதும் வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார். சி.ஏ.ஏ.வை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவது குறித்து சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும் எனவும் தனது பரப்புரையில் வரிசையாக அறிவித்திருக்கிறார்.

முதலமைச்சரின் முதலை கண்ணீரை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்றபோதும், திமுக முன்வைத்த கோரிக்கையை காலந்தாழ்த்தியேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்த அரசு உள்ளது. வெற்று அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Stalin ,CAA ,CHILL , MK Stalin insists: CAA, Koodankulam case should be withdrawn
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்