×

ஸ்ரீரங்கம் கோயில் விழாக்கள், உற்சவங்கள் குறித்து பிப். 22ல் மடாதிபதிகள், அறங்காவலர்கள் கூட்டம்: ஐகோர்ட்டில் அறநிலைய துறை தகவல்

சென்னை: திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோயிலில் நடக்க உள்ள விழாக்கள் எப்படி நடத்துவது என்பது குறித்து, மத தலைவர்களுடன் கலந்து பேசி,  அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். ஆனால் அறநிலையத்துறை அந்த ஏற்பாட்டை செய்வில்லை. இதனால், நீதிமன்ற உத்தரவை பின்பற்ற தவறிய அறநிலையத்துறை  ஆணையருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலைய துறை ஆணையர் பிரபாகர் நேரில் ஆஜராகியிருந்தார்.
அப்போது, அறநிலைய துறை தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், விழாக்கள் நடத்துவது குறித்து மடாதிபதிகள், அறங்காவலர்கள்  கூட்டத்தை பிப்ரவரி 22ம் தேதி கூட்டியுள்ளதாக தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்ட மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், கோயில் அறங்காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள நிலையில், சென்னையில் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், நேரிலும், ஆன்லைன் மூலமும் கலந்து கொள்ளலாம் என கூறி விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Srirangam Temple Festival ,Festival of Ceremonies Meeting ,Icorde , Srirangam temple festivals, festivities on Feb. 22nd meeting of abbots and trustees: Department of the Treasury information in the iCourt
× RELATED முன்னாள் டிஜிபி மீதான பாலியல் புகார்...