×

சொத்தின் உரிமையாளர் கையொப்பமிட்டால் தான செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவுக்கு ஏற்கவேண்டும்: பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவு

சென்னை: பதிவுத்துறை ஐஜி சங்கர் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
* மனைப்பிரிவு அங்கீகாரம் கோரும் மனுதாரர்களுக்கு (சொத்தின் உரிமையாளர்கள்) நகர ஊரமைப்புத்துறையால் அரசுக்கு சாலை மற்றும் திறந்த வெளி இடஒதுக்கீடு ஆகியவற்றிற்காக தானமாக வழங்கப்படும் நிலம் குறித்த வரைபடத்துடன் தான ஆவணம் பதிவு செய்திட கோரும் அறிவுரை கடிதம் வழங்கப்படும்.  மனுதாரர்களால் (சொத்தின் உரிமையார்கள்) மேற்குறிப்பிட்ட வரைபடம் மற்றும் அறிவுரை கடிதத்துடன் அரசுக்கு சாலை மற்றும் திறந்தவெளி இடம் ஒதுக்கீடு ஆகியவற்றிற்காக தானம் ஆவணம் எழுதப்பட்டு மனுதாரர்கள் மட்டும் கையொப்பம் செய்து, பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் நிகழ்வுகளில் அவ்வாவணப்படி தானம் வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக அதன் தலைவர்/ஆணையர் ஆகியோரின் கையொப்பம் ஆவணத்தில் இடம் பெற வேண்டும் என மனுதாரர்களை வலியுறுத்தக்கூடாது.
* இந்த நடைமுறையால் நகர் ஊரமைப்புத்துறையால் வழங்கப்படும் அறிவுரைக்கடிதம் மற்றும் வரைப்படத்துடன் வரப்பெறும் தான ஆவணங்களுக்கு மட்டும் பொருந்தும்.
 தான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை தன்னிச்சையாக சொத்தின் தானம் அளித்தவர்களால் ரத்து செய்து அத்தகைய ரத்து ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்படின் அவ்வாவணத்தினை பொறுத்தமட்டில் பதிவுக்கு ஏற்கக்கூடாது.
* பதிவு அலுவலர்கள் எவ்வித குறைபாடுக்கும் இடமின்றி மேற்கூறிய நடைமுறையினை பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.

Tags : IG Sankar , Dismissal of 10 lakh corona cases registered during the curfew: Government of Tamil Nadu
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை...