உன்னாவில் மர்மமான முறையில் இறந்த 2 சிறுமிகளின் உடல்கள் பாதுகாப்புடன் தகனம்

உன்னாவ்: உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டம், பாபுஹரா கிராமத்தை சேர்ந்த 14, 15 மற்றும் 16 வயதுடைய 3 சிறுமிகள், கடந்த 17ம் தேதி கால்நடைகளுக்கு தீவனம் கொண்டு வரச் சென்றனர். இரவாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர். அப்போது, விவசாய நிலத்தில் 3 சிறுமிகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்க நிலையில் கிடந்தனர். உடனடியாக 3 சிறுமிகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 14, 15 வயதுடைய சிறுமிகள் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு போராடிய நிலையில் 16 வயதுடைய சிறுமி கான்பூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இப்பிரச்னை பரபரப்பான நிலையில், 2 சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடனடியாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள், பாஜ மாநில தலைவர் ராஜ் கிஷோர், எம்எல்ஏ அனில் சிங் மற்றும் பலர் முன்னிலையில் நேற்று 2 சிறுமிகளின் உடல் தகனம் செய்யப்பட்டது. சிறுமிகள் மர்மமாக இறந்தது குறித்து உபி போலீசார் விசாரிக்

கின்றனர்.

வாலிபர்,  சிறுவன் கைது

உன்னாவ் சிறுமிகளின் மரணத்தில் நிலவிய மர்மம் நேற்றிரவு விலகியது. இச்சம்பவம் தொடர்பாக வினய் மற்றும் சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சிறுமிகளை இவர்கள் ஒருதலையாக காதலித்துள்ளனர். அதற்கு அவர்கள் மறுக்கவே, 3 சிறுமிகளுக்கும் தண்ணீரில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். அதை குடித்ததால், 2 சிறுமிகள் இறந்துள்ளனர். கை, கால்களை கட்டிப் போட்டதால் சிறுமிகளை இவர்கள் பலாத்காரம் செய்ய முயற்சித்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனால், பிரேத பரிசோதனையில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

Related Stories:

>