×

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 4 வீரர்கள் பலி: முதன்முறையாக மவுனம் கலைத்த சீனா

பெய்ஜிங் : கடந்த ஜூன் 15-ம் தேதி இந்திய-  சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக சீன ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே கடந்த ஜூன் 15ம் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தது. ஆனால், சீனத் தரப்பில் உயிரிழப்பு பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான குளோபல் டைம்ஸில் இன்று  வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கரகோரம் மலைகளில் பணியமர்ந்தப்பட முன்கள அதிகாரிகள் 5 பேர் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணியதற்காக சீன ராணுவத்தின் மரியாதைக்குத் தகுதி பெறுகின்றனர். 5 பேரில் ஒருவர் காயமடைந்தவர், மற்ற நால்வரும் வீரமரணம் அடைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென் ஹோங்ஜுன், ஸியான்க்ராங், ஸியோ சியுவான், வாங் ஜூரோன் ஆகியோர் இறுதிமூச்சு வரை போராடி இறந்தனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ராணுவம் இவ்வாறாக ஒப்புக்கொண்டுள்ளது இதுவே முதல் முறை. சீன சமூக ஊடகங்களிலும் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Calvan Valley conflict ,China , சீனா
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...