×

நாளை லடாக் எல்லையில் 10-வது முறையாக சந்திப்பு..: பாங்காங் பகுதியில் அமைதியை பேணுவது குறித்து பேச்சு

லடாக்: லடாக் எல்லையில் இருந்து இந்திய-சீன படைகள் பின்வந்தப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகள் இடையான ராணுவ கமாண்டோ மட்டத்திலான 10-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை தொடங்கயுள்ளது. இந்தியவில் உள்ள லடாக் எல்லையில் பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சித்ததால், இரு தரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதேபோன்ற தொடர் நிகழ்வுகளால் லடாக் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு வந்தது. ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தநிலையில் இந்திய-சீன ராணுவ கமாண்டர் இடையான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையில் பாங்காங் பகுதியில் இருந்து படைகளை பின்வாங்க முடிவு எட்டப்பட்டது.

இதனையடுத்து இந்தியாவோ, சீனாவும் லடாக் எல்லையில் இருந்து படைகளை பின் வாங்கியதால் லடாக்கில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. எல்லையில் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இந்திய-சீன ராணுவ கமாண்டோ மட்டத்திலான 10-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

எல்லையில் படைகளை குறைப்பது, லடாக்கில் அமைதி நீடிப்பதை உறுதி செய்வது குறித்தும் இரு தரப்பு வீரர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.


Tags : Ladakh ,Bangong , Meeting for the 10th time on the Ladakh border tomorrow ..: Talk about maintaining peace in the Bangkok area
× RELATED மோடியின் சீன உத்தரவாதம் லடாக் மக்களுக்கு துரோகம்: கார்கே சாடல்