×

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கண்மாய் மீன்பாசி ஏலம் ரத்து -கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

ராஜபாளையம் : ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ேநற்று நடைபெற இருந்த மீன்பாசி ஏலம் திடீரென ரத்தானது. இதனால் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 கண்மாய்களில் கடந்த மாதம் பெய்த  தொடர்மழை காரணமாக  நீர் நிறைந்தது. இதையொட்டி மீன்பாசி ஏலம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக 200க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அதிகாரி ஏலத்தை ஆரம்பித்ததும், அதிக அளவில் கூட்டம் வந்ததால், அதைக் கட்டுப்படுத்த முடியாமல் மீன் பாசி ஏலத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி நாகஷங்கர் தலைமையிலான போலீசார், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் கூடியிருந்தவர்களை வெளியேற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Government's Union Office ,Kandi ,Civilians , Rajapalayam: The fish moss auction which was to be held at the Rajapalayam Panchayat Union office yesterday was abruptly canceled. Thus the public
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை