×

அண்ணா பல்கலை.யில் எம்.டெக். பயோடெக்னாலஜி, கம்ப்யூடேஷனல் டெக்னாலஜியில் மாணவர் சேர்க்கையை தொடங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: எம்.டெக். பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூடேஷனல் டெக்னாலஜி சேர்க்கைக்கு நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை தொடங்க அண்ணா பல்கலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 49.9% இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.டெக். படிப்பில் 49.5% இட ஒதுக்கீட்டை ஏற்று தமிழக அரசு ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளதாக ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


Tags : Anna University ,M. Tech ,iCourt , Anna University, M.Tech. Biotechnology, Student Admission, iCord
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...