×

புதுச்சேரி அங்கன்வாடி மையத்தில் பொறுப்பு ஆளுநா் ஆய்வு...மக்கள் சார்ந்த அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவேன்..:தமிழிசை பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் எனது ஆளுமைக்குட்பட்டு மக்கள் சார்ந்த அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவேன் என ஆளுநா் தமிழிசை தெரிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி முதல் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடி, அந்தப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதனை தொடர்ந்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என குடியரசுத் தலைவா் மாளிகை அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில் இன்று அவர் புதுச்சேரி முதலியார்பேட்டை இந்திரா நகர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் எனது ஆளுமைக்குட்பட்டு மக்கள் சார்ந்த அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவேன் என தெரிவித்துள்ளார்.


Tags : Anglanwadi Centre ,Novuchcheri , Puducherry Anganwadi Center responsible governor study ... I will focus on all areas related to the people ..
× RELATED புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் புதிய தேதி அறிவிப்பு