×

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியது

வேதாரண்யம் : கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு கோடியக்கரையில் பருவமழை அதிகஅளவு பெய்து மழைநீர் தேங்கிய உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து பூநாரை, கூழகிடாய், உள்ளான் வகை, லிட்டில்சென்ட், பறவைகள் அதிக அளவில் வந்துள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

2 நாட்கள் நடைபெறும் கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள், வனத்துறையினர் என 70க்கும் மேற்பட்டோர் 12 குழுக்களாக பிரிந்து 12 வழிதடத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவிலிருந்து லிட்டில்சென்ட் என்ற சிறிய வகை பறவை எந்த ஆண்டிலும் இல்லாத அளவில் இந்த ஆண்டு லட்சக்கணக்கில் வந்துள்ளதாக கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

Tags : Sanctuary of Codiacer Birds , Vedaranyam: Bird census has started at Kodiakkarai Bird Sanctuary.
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...