×

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வழிநடத்துக் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய வம்சாவளி பெண்!

வாஷிங்டன் : நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலம் இன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.அமெரிக்காவின் இந்த வரலாற்று மிக்க பெர்சிவரன்ஸ் விண்கல ஆய்வு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகள் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ஸ்வாதி மோகனுக்கு முக்கிய பங்கு உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு பெர்சிவரன்ஸ் விண்கலம் அனுப்பும் திட்டத்தை நாசா 2013ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதலே அதில் ஈடுபட்டு வந்தார் ஸ்வாதி மோகன், ஆய்வு பாகம் தயாரிப்பின் வழிக்காட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக ஸ்வாதி மோகன் செயல்பட்டார்.

ரோவர் வாகனம் செவ்வாய் கிரகத்தின் தரை பரப்பில் எப்படி எல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பம் டாக்டர் ஸ்வாதி மோகனால் உருவாக்கப்பட்டது. ஸ்வாதி மோகன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தவர், ஓரு வயதிலேயே அமெரிக்காவிற்கு சென்ற ஸ்வாதி பள்ளியில் பயின்றபோதே விண்வெளி அறிவியலில் நாட்டம் கொண்டவர். அவர் விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுடனும் உயர் ஆராய்ச்சி படிப்பை முடித்து, டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் பணிக்கு சேர்ந்த ஸ்வாதி, சனி கிரகத்திற்கான நிலவுக்கான பயண திட்டங்களிலும் ஈடுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


Tags : Indian ,steering committee ,NASA , பெர்சிவரன்ஸ்
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்