×

சாமனியர்களுக்கு தங்கம் வாங்க இது செம சான்ஸ்... ஒரு சவரன் ரூ. 360 குறைந்து ரூ.34,720க்கு விற்பனை.. நகை விரும்பிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!!

சென்னை : சென்னையில் இன்று தங்கம் விலை 360 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் முழுவதும் தங்கம் விலை உச்சத்திலேயே இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு முதல் வாரத்தில் தங்கம் விலை கணிசமான அளவில் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. அதே போல் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.35,040-க்கு விற்பனையானது. இன்றும் நல்ல செய்தியாக தங்கம் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்...

சென்னையில் இன்று (பிப்ரவரி 19) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,385 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,340 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்துள்ளது.அதேபோல, நேற்று 35,712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 360 ரூபாய் குறைந்து 34,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 1.70 குறைந்து ரூ.72.30 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 72,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Rs. ,Jewelry lovers , தங்கம்
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...