×

செவ்வாயில் தரையிறங்கிய விண்கலத்தை வழிநடத்திய இந்தியப்பெண்!.. இந்தியாவிற்கும் உலகிற்கும் பெருமைமிகு தருணம் என மு.க.ஸ்டாலின் புகழாரம்!!

சென்னை :செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ள ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தின் செயல் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தலைமை வகிக்கும் அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்வாதி மோகனுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலம் இன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.அமெரிக்காவின் இந்த வரலாற்று மிக்க பெர்சிவரன்ஸ் விண்கல ஆய்வு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகள் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ஸ்வாதி மோகனுக்கு முக்கிய பங்கு உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு பெர்சிவரன்ஸ் விண்கலம் அனுப்பும் திட்டத்தை நாசா 2013ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதலே அதில் ஈடுபட்டு வந்தார் ஸ்வாதி மோகன், ஆய்வு பாகம் தயாரிப்பின் வழிக்காட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக ஸ்வாதி மோகன் செயல்பட்டார்.

இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்து குழுவின் தலைவர் டாக்டர். சுவாதி மோகன் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் சாதனை, இந்தியாவிற்கும் உலகிற்கும் பெருமைமிகு தருணம்! நாசா ஜே.பி.எல் மற்றும் அதன் அறிவியலாளர்கள் அறிவியலின் புதிய எல்லைகளைக் கடந்து, நமது அறிவின் பரப்பை விரிவாக்கம் செய்வதை கண்டு வியப்புக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : spacecraft ,Indian ,Mars ,world ,MK Stalin , மு.க.ஸ்டாலின்
× RELATED இஸ்ரோ தகவல் இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுத்தது