சேலம் அருகே சுத்தியால் மகளை அடித்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை

சேலம்: எடப்பாடி அருகே 15 வயதான மகளை சுத்தியால் அடித்துக்கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார். மணியகாரம்பாளையம் ஆதிகாட்டூரில் காய்கறி வியாபாரி கோபால் தனது மகள் பிரியாவை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகளை கொன்றுவிட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த கோபால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல் வெளியாகியுள்ளது. கிராம மக்களை போல மகளும் தன்னை மனநலம் பாதித்தவர் என கூறியதால் தந்தை கொன்றதாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

Related Stories:

More
>