×

ராஜஸ்தான். ம.பி.யில் ரூ.100ஐ கடந்த பெட்ரோல் விலை : லிட்டருக்கு 200ரூ கொடுக்க தயாராக இருக்கும் சங்கிகளே தேஷ்பக்தர்கள் என திருமுருகன்காந்தி சாடல்!!

புதுடெல்லி:  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   

நாட்டிலேயே முதல் முறையாக நேற்று முன்தினம் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகரில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. இதுபோல், மத்திய பிரதேசத்தில் உள்ள அனுப்பூரில் பெட்ரோல் விலை நேற்று 34 காசு உயர்ந்து 100.25 ஆக உயர்ந்தது. டீசல் 32 காசு அதிகரித்து 90.35க்கு விற்கப்பட்டது.

இதுகுறித்து மே-17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன்காந்தி, ‘’டெண்டுல்கர் மட்டும் தான் சதம் அடிப்பாரா, மோடி அரசும் செஞ்சுரியை கடக்கிறது. பாஜகவின் மத்தியபிரதேசத்தில் பெட்ரோல் விலை தற்போது ரூ100. விலை ஏன் உயர்ந்தது என கேட்கிறவர்கள் ‘தேசத்துரோகிகள்’. லிட்டருக்கு 200ரூ கொடுக்க தயாராக இருக்கும் சங்கிகளே தேஷ்பக்தர்கள் என அறிக’’ என்று கடுமையாக சாடியிருக்கிறார்.

Tags : Rajasthan ,patriots ,Thirumurugankanthi Satal , திருமுருகன்காந்தி
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்