சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். வளசரவாக்கம் டிரங்க் சாலையில் நடந்து சென்ற தொழிலாளி சதீஷ் (34) மீது மாநகர பேருந்து மோதியதில் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக மாநகரப் பேருந்து ஓட்டுநர் சூர்யாவை போலீசார் கைது செய்தனர். புழல் தாம்பரம் சாலையில் லோடு வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் ராஜேந்திரன் (21) பலியானார். மூலக்கடையில் லோடு வேன் மோதி 30 வயது மதிக்கத்தக்க பிச்சைக்காரர் உயிரிழந்தார்.

Related Stories:

>