போக்குவரத்து தொழிலாளர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி: 23ம் தேதிக்குள் முடிவு தெரிவிக்காவிட்டால் வேலை நிறுத்தம்

சென்னை: தமிழ்நாடு அரசு, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்க வேண்டிய ஊதிய பல முறை நடத்தியும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த குழு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், நேற்று குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பயிற்சி வளாகத்தில் நடந்தது. இதில் போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள், 8 அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்பட்டு வரும் தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 66 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருக்கக்கூடிய அலவன்ஸ் பாக்கி கொடுக்க வேண்டும் என்றனர்.

கிட்டத்தட்ட 560 கோடி ரூபாய்க்கான தொகை வழங்குவதற்கு கோப்புகள் நிதித்துறையில் இருக்கிறது. மிக விரைவில் அது வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அதிகாரிகள் அளித்திருக்கிறார்கள். எனவே முதலமைச்சரிடம் அவர்களுடைய கோரிக்கைகள் எல்லாம் எடுத்துச் சொல்லி அது சம்பந்தமாக அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இப்போது இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அடுத்த வாரம் முதலமைச்சரிடம் கலந்துபேசி இன்னொரு கூட்டம் நடைபெறும். போன முறை பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இதுவரை இல்லாத வகையில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊதிய உயர்வு கொடுத்தோம். எனவே,பொது மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நிறுவனம். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பென்ஷனையும் முழுமையாக கொடுத்திருக்கிறோம். இருந்தாலும் அவர்களுடைய கோரிக்கைகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர்  கூறினார்.

பேச்சுவார்த்தை குறித்து, தொமுச செயலாளர்  நடராஜன் கூறியதாவது: இன்றைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கலந்து பேசுவதாக சொல்லி இருக்கிறார். நாங்கள் எடுத்திருக்கின்ற முடிவு, 23ம் தேதிக்குள் கலந்து பேசி, தெளிவான முடிவை அமைச்சர் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றால், கூட்டமைப்பு சங்கங்கள் 23ம் தேதி வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை வெளியிடுவோ

Related Stories:

>