×

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து நீதிபதி தலைமையில் 8 பேர் குழு விசாரணை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: விருதுநகர் அச்சன்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் சில தினங்களுக்கு முன் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு, 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏகே கோயல், தமிழக அரசு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், மாநில மாசு கட்டுப்பாடு வாரியம், விருதுநகர் மாவட்ட கலெக்டர், மாரியம்மாள் பட்டாசு ஆலை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்துக்கான உண்மை காரணத்தை கண்டறிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.கண்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவையும் நீதிபதி கோயல் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதோடு, விபத்து நடந்த இடத்துக்கு சென்று விரைவில் ஆய்வு செய்து விசாரணை நடத்தவும், ஒரு மாதத்தில் இ மெயில் மூலமாக தனது அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதி கோயல் உத்தரவிட்டுள்ளார்.

Tags : panel ,Judge ,Virudhunagar Fireworks Factory Fire , 8-member panel headed by Virudhunagar Fireworks Factory Blast Judge: National Green Tribunal Order
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான கேரள அரசு...