திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி உற்சவம் இன்று தொடக்கம்

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். ஒரே நாளில் 7 வாகனங்களில் சுவாமி தாயார் வீதி உலா வருவதால் இந்த உற்சவத்தை மினி பிரமோற்சவம்’’ என்று அழைக்கப்படுகிறது. சுவாமி வீதி உலாவை காண்பதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆன்லைனில் 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் குவிந்துள்ளனர்

Related Stories:

>