வர்த்தக ரீதியாக யாரும் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்தக் கூடாது: வெள்ளை மாளிகை உத்தரவு

வாஷிங்டன்: ‘அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை வர்த்தகரீதியிலான நோக்கத்துக்காக பயன்படுத்தக் கூடாது,’ என வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் கடந்த மாதம் 20ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவருடைய உறவினர் மீனா ஹாரிஸ். இவர் தனது நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு வர்த்தக நோக்கத்தில் கமலா ஹாரிசின் பெயரை பயன்படுத்தி உள்ளார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதால், வெள்ளை மாளிகை அதற்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக கமலா ஹாரிசின் ஊடக செயலாளர் சப்ரினா சிங் கூறுகையில், “துணை அதிபரும், அவருடைய குடும்பத்தினரும் உயர்ந்த நெறிமுறைகளை நிலைநிறுத்த வேண்டும். வெள்ளை மாளிகையின் கொள்கையின்படி, துணை அதிபரின் பெயரை பயன்படுத்தி வர்த்தகம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் பிரபலமாகும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது.  அவருடைய பெயரை குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட யாரும் வர்த்தக ரீதியாக தவறாக பயன்படுத்தக் கூடாது,” என்றார்.

Related Stories:

>