×

கொரோனா ஆபத்து முடிந்தாலும் ஆன்லைன் கற்பித்தல் தொடர்ந்து நீடிக்கும்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கணிப்பு

வாஷிங்டன்: ‘கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்தாலும் கூட, ஆன்லைன் கல்வி என்பது இனிமேல் நிற்காது,’ என்று கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக. உலகமே தற்போது ஆன்லைன் மூலம் இயங்கி வருகிறது. குறிப்பாக, கல்வி நிலையங்கள் அனைத்தும் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வியை அளித்து வருகிறது.  இந்நிலையில், ஆன்லைன் வகுப்புக்களை மையமாக கொண்ட 50க்கும் மேற்பட்ட மென்பொருள் டூல்சை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், ‘‘கொரோனா தொற்று ஆபத்து எதிர்காலத்தில் நீங்கி விட்டாலும் கூட, ஆன்லைன் கற்பித்தல் என்பது இனிமேல் எங்குமே நிற்காது.

எங்கிருந்து வேண்டுமானாலும் கற்கலாம், எங்கிருந்து வேண்டுமானாலும் கற்பிக்கலாம்  என்பது முடியாது. அடுத்து வருவதை கற்றுக் கொள்வதை மறுபரிசீலனை செய்வதற்கான நம்ப முடியாத வாய்ப்பு நமக்கு உள்ளது. எனவே தான், கடந்தாண்டு கற்றல் மற்றும் கல்வியை கவனம் செலுத்தும் பகுதியாக மாற்றினோம். கற்றல், கற்பித்தல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.



Tags : Sundar Pichai ,Google , Online teaching will continue despite corona risk: Google CEO Sundar Pichai predicts
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்