திருத்தணி முருகர் கோயில் பெண் ஆய்வாளர் தற்கொலை

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முருகாரெட்டி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(45), ஒப்பந்ததாரர். இவரது மனைவி தூயதேவி(41). இவர் திருத்தணி முருகர் கோயிலில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். பிரகாஷ் தொழில் ெசய்வதற்காக மனைவிக்கு தெரியாமல் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதையறிந்த தூயதேவி, பிரகாஷிடம் கேட்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தூயதேவி நேற்றுமுன்தினம் தூக்குப்போட்டு தொங்கினார். குடும்பத்தினர், அவரை மீட்டு ேசாளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related Stories:

More
>