×

வறட்சி மிகுந்த பகுதிகளுக்கு கழிவுநீரை கொண்டுவந்து சேர்க்க முதல்வர் ஆர்வம்: அமைச்சர் பாஸ்கரன் உளறலால் அதிமுகவினர் ‘‘ஷாக்’’

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், ‘‘காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைத்துள்ளார் என்றார். பின்னர் அமைச்சர் பாஸ்கரனிடம் செய்தியாளர்கள், ‘‘திமுக ஆட்சியில்தான் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. புதியதாக இத்திட்டத்தை கொண்டு வந்தது போல முதல்வர் துவக்கி வைத்துள்ளாரே’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், ‘‘காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முதல்வர் வறட்சி மிகுந்த பகுதிகளுக்கு கழிவுநீரை, வேஸ்டாக போகும் நீரை கொண்டு வந்து சேர்க்க ஆர்வமாக இருந்தார். இது முத்தான திட்டம்’’ என்றார். உபரிநீரை கொண்டு வர முதல்வர் ஆர்வமாக இருந்தார் என கூறாமல், கழிவுநீரை கொண்டுவர ஆர்வமாக இருந்தார் என உளறியதால் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.

Tags : Chief Minister ,Baskaran ,areas , Chief Minister wants to bring sewage to drought-hit areas: Minister Baskaran
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...