கோவையில் பரிதாபம்: தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை சாவு

கோவை :கோவை மசக்காளிபாளையம் அருகே சுப்பண்ணா வீதியை சேர்ந்தவர் பிரசாந்த் (32).‌ கார் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (28). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. மேலும், கிஷாந்த் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் குழந்தை, காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பினால் மூச்சு விட சிரமப்பட்டுள்ளது.  பெற்றோர் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடந்த சுகாதாரத்துறையினர் முகாமிற்கு சென்றனர். அங்கு நர்ஸ், குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதா? என கேட்டு, ‘‘இரண்டரை மாதத்தில் பெண்டாவேலட் தடுப்பூசி போடவேண்டும்.  டயரியா, மஞ்சள் காமாலை உட்பட 4 வகையான நோய் பாதிப்பை தடுக்கும்’’ எனக்கூறி ஊசி போட்டுள்ளார். சொட்டு மருந்தும் கொடுத்துள்ளார். வீட்டிற்கு வந்த விஜயலட்சுமி குழந்தைக்கு 4 சொட்டு மருந்து கொடுத்தார்.  

அதற்கு பிறகும் குழந்தை தூங்காமல் மூச்சு விட திணறியபடி அழுதது. சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்தது. மசக்காளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.  டாக்டர் கூறியதன்பேரில், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்தது. தடுப்பூசி போடப்பட்டதால்தான் குழந்தை இறந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். ஆனால் டாக்டர்கள் அதை மறுத்தனர்.

Related Stories:

>