×

வேட்பாளர்களை நிறுத்தப்போறோம்: நாங்களும் களத்துல இறங்குவோம்ல

உலகநாடுகள் எல்லாமே பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வச்சிருந்தாலும், நம்ம இந்தியாவில மட்டும் ஏனுங்க இதுக்கு வழியே இல்லை? என்று பாமர மக்களையும் புலம்ப வைத்திருக்கிறது சமீபகாலத்திய விலை உயர்வு. விர் என ஏறும் பெட்ரோல் விலை ஏற்றத்தை கண்டிச்சு சைக்கிள் ஓட்டும் போராட்டம், மாட்டுவண்டி ஓட்டும் போராட்டம், கட்டை வண்டி ஓட்டும் போராட்டம் என்று திசைக்கொரு போராட்டங்களால் இந்தியாவும், தமிழகமும் திகைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் இருந்து எதிர்ப்பை பதிவு பண்ணிகிட்டே இருக்காங்க. இதில் ஒரு சில அமைப்புகள் தேர்தல் என்னும் அஸ்திரத்தையும் கையில் எடுத்திருக்காங்க. இந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் சார்பில் தேர்தலில்  வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் முருகன் வெங்கடாசலம் கூறுகையில், ‘‘இதுவரை இல்லாத வகையில் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையேற்றமும், பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையும், புதிய மோட்டார் வாகனச்சட்டமும், சுங்கச்சாவடி கொள்ளையும் லட்சக்கணக்கான லாரிகளையும், கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் முடக்கிப்போட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எங்களது பிரதிநிதிகளை தேர்தலில் நிறுத்தி, ஆளும் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளோம். இது குறித்து அனைத்து சங்கங்களிடமும் ஆலோசித்து வருகிறோம். விரைவில் இது குறித்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகும்’’ என்றார்.

Tags : field , Let's stop the candidates: We will not go down to the field either
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...