பொறுப்பு குழுவா? போர் குழுவா? கட்சிக்குள்ளே நக்கல்

தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்னு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மாங்கனி மாநகர் மாவட்ட அதிமுகவில்  தொகுதி பொறுப்பாளர்கள் என கொஞ்சம் பேரை நியமிச்சிருக்காங்க. மாநகர் மாவட்டத்துல மட்டும் 3 தொகுதி இருக்கு. மாவட்டம் முழுவதுக்குமான பொறுப்பாளரா முன்னாள் அமைச்சர் பொன்னையனை ஏற்கனவே நியமிச்சிட்டாங்க. அதே நேரத்தில் மாநகர்ல உள்ள மூணு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களா தலா 30 பேரை நியமிச்சிருக்காங்க. இதுல அனைத்து பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளும் இடம்பெற்றிருக்காங்க. ‘ஆறு பேர் கொண்ட குழுவா இருந்தால் அது தேர்தல் பொறுப்புக்குழு. 30 பேர் கொண்ட குழு என்றால் அது தேர்தல் போர் குழு’ என கட்சியினரே ஓப்பனாக பேசி நக்கல் செய்யுறாங்களாம். இதில் உச்சகட்டமா இந்த பொறுப்புக்குழுவில் இடம் பெற்றுள்ள ஒருத்தர், ‘‘தொகுதி பொறுப்பாளரா என்னை  நியமிச்ச முதல்வருக்கும், பரிந்துரை செய்த மாவட்ட செயலாளருக்கும் நன்றி...நன்றின்னு தனக்கு தானே நோட்டீஸ் அடிச்சி ஒட்டிக்கிட்டாராம்.

Related Stories:

>