பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அண்ணாசாலையில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த திஷா ரவி என்ற இளம் பெண்ணை கைது செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் அண்ணா சாலை தர்கா அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானா தலைமை வகித்தார். துணை தலைவர் ஆனந்த் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் இப்ராஹிம் ஜாபர், மாநில செயலாளர்கள் பிரதீஷ் குமார், கலையரசன், மன்சூர் வெங்கட், ரஞ்சித், திவாகர் உட்பட பலர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: