தொழிலதிபரிடம் 3 லட்சம் லஞ்சம் தனியார் வங்கி அதிகாரி கைது

சென்னை: வங்கியில் வாங்கிய கடனை ஒரே தவணையில் செலுத்த சலுகை வழங்க தொழிலதிபரிடம் 3 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் வங்கிய அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கோவையை சேர்ந்த தொழிலதிபர்  ஸ்ரீவந்த் விஸ்வேஸ்வரன், சென்னையில் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்காக பிரட்வேயில் உள்ள தனியார் வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை ஒரே தவணையில் செலுத்த வங்கி சார்பில் தொழிலதிபருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், வாங்கிய கடனை ஒரே தவனையில் செலுத்த தொழிலதிபருக்கு சலுகைகள் வழங்க கடன் கொடுத்த தனியார் வங்கியில் பணியாற்றும் அதிகாரி ராஜேந்திரன் என்பவர், 3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தொழிலதிபர் இதுகுறித்து சிபிஐயில் புகார் அளித்தார்.

அதன்படி சிபிஐ அதிகாரிகள் ஆலோசனைப்படி நேற்று கோயம்பேடு பகுதியில் உள்ள பிரபல கிளப்பில் வைத்து தொழிலதிபர்  ஸ்ரீவந்த் விஸ்வேஸ்வரன் ₹3 லட்சத்தை வங்கி அதிகாரி ராஜேந்திரனிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்து இருந்த சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணம் 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

More