செயலர் தற்கொலை வழக்கில் ஊராட்சி தலைவர் கைது

திருவள்ளூர்: .திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது மேல்நல்லாத்தூர் ஊராட்சி. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக அரிபாபு உள்ளார். செயலாளராக கடம்பத்தூர் ஊராட்சியை சேர்ந்த பாஸ்கர்(48) பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் வழக்கம்போல ஊராட்சி மன்ற அலுவலகம் சென்றவர், திடீரென தனது அறையிலேயே மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து, பிடிஓவிற்கு ஊராட்சி செயலாளர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், ‘நான் 1998 முதல் செயலாளராக பணிபுரிந்து வருகிறேன். எனது பணியில் எந்த தவறும் நடக்காமல் பணி செய்து வந்துள்ளேன்.

தற்போது 1.1.20 முதல் 6.2.21 வரை ஊராட்சியில், மன உளைச்சலுக்கு ஆளாக்கி என்னை இந்த தவறான முடிவுக்கு தள்ளி விட்டார்கள் என்பதை இக்கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.  திருவள்ளூர் தாலுகா போலீசார், ஊராட்சி தலைவர் அரிபாபுவை, தற்கொலைக்கு தூண்டியதாக  கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>