பைக் மோதி குழந்தை பலி

ஆவடி: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கீழ்பேட்டை கிராமத்தைச் சார்ந்தவர் குமரன். இவர் விவசாயி. இவரது மகள் யோகிதா(3). இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரன், மனைவி, குழந்தைகளுடன் ஆவடி அருகே மேல்பாக்கம், சிவன் கோவில் தெருவில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், நேற்று முன்தினம் மதியம் வீட்டு முன்பு சாலையை குழந்தை யோகிதா கடக்க முயன்ற போது, அந்த வழியாக பைக்கில் ஒரு வாலிபர் அதிவேகமாக வந்துள்ளார். அந்த பைக், குழந்தை மீது திடீரென மோதி விட்டது. இதில், குழந்தை தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனையடுத்து குழந்தையை உறவினர்கள் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு, அவர்கள் டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி குழந்தை யோகிதா நள்ளிரவு உயிரிழந்தாள். புகாரின் அடிப்படையில், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

Related Stories:

>