இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை; ஆட்சியை மாற்றுவது பாஜகவுக்கு கை வந்த கலை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்தார். வரும் 21-ம் தேதி காங்கிரஸ் கூட்டம் மீண்டும் நடைபெறும் என கூறினார். ஆட்சிக் கழிப்பு வேலையில் எதிர்கட்சி தலைவர் ரெங்கசாமி தொடர்ந்து ஈடுபடுகிறார் என குற்றம் சாட்டினார். ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆட்சியை மாற்றுவது பாஜகவுக்கு கை வந்த கலை என கூறினார்.

தேர்தல் நேரத்தில் ஆட்சி கவிழ்ப்பை பாஜக தொடங்கியுள்ளது என தெரிவித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டு உள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி இழந்துள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம் என முதல்வர் நாராயண சாமி தெரிவித்தார்.

Related Stories:

>